பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 37 நாட்கள் ஆகி விட்டன. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். எனவே இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது.
மேலும் கடந்த 2 சீசன்களாக திருநங்கைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கடந்த சீசனில் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் சில நாட்களிலேயே மருத்துவ காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.
அதேபோல் இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் திருநங்கை ஷிவின் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.இவர் சூப்பராக விளையாடி வருவதால் பைஃனல் வரைக்கும் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வாரம் லக்ஜரி பட்ஜெட் டாஸ்க்காக பிபி ரோஸ்ட் என்கிற டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் கதிரவன் மற்றும் ஷிவின் ஆகியோர் மாறி மாறி கலாய்த்துள்ளனர். அந்த வகையில் ஷிவின் கதிரவனைக் கலாய்க்கும் போது பிக்பாஸ் வீட்டின் 10 டாக்டர் கதிரவன் தான்.
#Shivin #BiggBossTamil6 #BiggBossTamil
10 mani doctor 🤣🤣 pic.twitter.com/gk5rbeBrab
இவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ள 10 மணிக்கு மேலே தான் அறிவுரை கூறுவார். இவருக்கு யாரோ சொல்லி அனுப்பிட்டாங்க பிக்பாஸ் கேம் என்பது பாட்ஃரி மாற்றுவது கதைவ சாத்துவது என்று யாரோ தப்பா சொல்லிட்டாங்க அவர் அதை மட்டும் தான் இங்க பண்ணிட்டு இருக்கிறார் என்று கலாய்த்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!