• Nov 11 2024

விஜய்க்கு 100 கோடி ஓக்கே, ஆனால் அஜித்திற்கு...விளாசிய தயாரிப்பாளர் கே.ராஜன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - அஜித் இருவரும் வரும் பொங்கல் ரேஸில் நேருக்கு நேராக களமிறங்குகின்றனர்.அத்தோடு கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான இருவருமே ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.துபாயில் விற்கப்படும் சொகுசு வில்லாக்கள் நீங்கள் நினைப்பதை விட மலிவானதாக இருக்கலாம்.இவ்வாறுஇருக்கையில், விஜய், அஜித் இருவரின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித் இருவரது படங்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறுஇருக்கையில், வாரிசு, துணிவு திரைப்படங்களில் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும், எந்தப் படத்துக்கு அதிகமான திரையரங்குகள் என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனிடையே தற்போது இன்னொரு பஞ்சாயத்தும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யும் அஜித்தும் ஆரம்பத்தில் குறைவாகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடிகளில் புரளும் அவர்கள், ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளரான கே ராஜன், கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் ஓக்கே தான், ஆனால் அஜித்துக்கு அது அதிகம் என கூறியுள்ளார்.

விஜய் ஏறகனவே 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அதேநேரம் அவரது படத்திற்கு வசூலும் நன்றாக உள்ளது. ஆனாலும், விஜய் 100 கோடி வரை சம்பளம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது தான். தயாரிப்பாளர்கள் கொடுப்பதால் அவர் வாங்குவதாக சொல்லப்படுகிறது.அத்தோடு  சன் பிக்சர்ஸ் விஜய்க்கு 100 கோடி வரை சம்பளம் கொடுத்திருப்பது கஷ்டம் தான்.மேலும்   அவங்க கொஞ்சம் குறைத்து தான் தருவாங்க, இதெல்லாம் நான் கேள்விப்பட்டது. எனினும் இப்போது வாரிசு படத்திற்காக தெலுங்கு தயாரிப்பாளர் 120 கோடி வரை விஜய்க்கு சம்பளம் கொடுத்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அஜித்தும் 100 கோடி ரூபாய் வாங்கலாம் என நினைக்கிறார்.

அஜித்தின் 3 படம் தோல்வி ஆனபோதும் அவர் 100 கோடி சம்பளம் கேட்பது தவறு. விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என இந்த மூன்றுமே தோல்விப் படங்கள் தான். விஸ்வாசம் மட்டும் வசூலில் கொஞ்சம் கை கொடுத்தது. எனினும் இதனை பார்த்த அஜித் சம்பளத்தில் 25 கோடி ரூபாய் குறைப்பது தான் நியாயம். 3 படங்கள் தோல்வியடைந்ததால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தால் நல்ல மனசாட்சி உள்ள மனிதராக இருந்திருப்பார். ஆனால், 3 படங்கள் தோல்வியடைந்தும் சம்பளத்தில் 40 கோடி ரூபாய் அதிகம் கேட்டுள்ளார் என்றால் அது என்ன மனசாட்சி என புரியவில்லை.



அத்தோடு நடிகர் அஜித்தை சந்திக்க ஒரு தயாரிப்பாளர் முயற்சி செய்துள்ளார். இத்தனைக்கும் அவர் ஏற்கனவே அஜித்தை வைத்து படம் பண்ண பழைய தயாரிப்பாளர் தான். அப்படிப்பட்ட தயாரிப்பாளரிடமே 95 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார் அஜித். 100 கோடி ரூபாய் சம்பளம் என்றால் உள்ளே வரச்சொல்லு, இல்லையென்றால் அப்படியே அனுப்பிவிடுங்கள் என அஜித் கூறியதாக அவர் தெரிவித்துள்ளாராம். அத்தோடு வெற்றி பெற்றால் தான் சம்பளத்தை ஏற்றிக்கொள்வதென்றால் கடைசியாக வெளியான 3 படங்கள் தோல்வியடைந்துள்ளதை பற்றி யோசிக்க வேண்டாமா என தயாரிப்பாளர் கே ராஜன் பேசியுள்ளார்.

போனிகபூர் ஏற்கனவே நிறைய கடன்கள் இருப்பதால் தான், அஜித்தை வைத்து படம் தயாரிக்க தமிழ்நாட்டுக்கு வந்தார்.அத்தோடு அவரும் இப்போது அஜித்தை வைத்து படம் தயாரித்து நஷ்டம் அடைந்துவிட்டார். அடுத்ததாக அஜித் லைகா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறாராம். லைகாவும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம் தான். தமிழ்நாட்டில் படம் எடுக்கலாம் என்று லைகா நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை தமிழர். அவருக்காகவாவது சம்பளத்தை குறைத்து வாங்க வேண்டாமா என தயாரிப்பாளர் கே ராஜன் காட்டமாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement