• Sep 20 2024

1000 கோடி வசூல் எனக்கு முக்கியமில்லை ! முதல் பத்து நிமிடம் மிஸ் பண்ணீடாதேங்க! தயாரிப்பாளரை அதிரவைத்த லோகேஷ் கனகராஜ்.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய், த்ரிஷா மற்றும் முக்கிய பிரபலங்களின்  நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளிவர இருக்கும் படம் தான் லியோ. இதன் இசை வெளியீட்டு விழா ரத்தாகியதில் இருந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த லியோ படத்தின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள். 


இந் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ பட ப்ரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வருகின்றார். இவர் தனக்கு 1000கோடி வசூல் எல்லாம் முக்கியமில்லை என கூறியிருக்கின்றார். என்னை பொறுத்தவரை 150 ரூபாய் கொடுத்துவரும் மக்களை எவ்வாறு என்டர்டைம்மென்ட் செய்ய முடியும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடாக இருக்கின்றது.


படத்தின் வசூலைப் பற்றி எப்போதும் எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ரசிகர்கள் ஒரு நேரம் செலவிட்டு  படத்தை  பார்கிறார்கள் என்றால் அவர்களை எவ்வாறு திருப்திப்படுத்த முடியும் என்பதை மட்டும் தான் இயக்குனர்கள் பார்க்கவேண்டும். லியோ படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம ரீட்டாக அமையும் அதுவும் முதல் பத்து நிமிடங்கள் ரசிகர்கள் மிஸ்பண்ணி விட வேண்டாம்  எனவும்  அந்த காட்சி ரசிகர்கள் கொண்டாடும் படியாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் லோகேஷ் கூறியுள்ளார்


இவர் சொல்லும் ஒவ்வொரு கதையும் ரசிகர்கள் மத்தியில்  லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்து வருகின்றது.

Advertisement

Advertisement