பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் திரைப்படம் அமைந்தது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது.
பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது. முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்தது.
ஐந்து நாளில் பதான் படம் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாயை வசூலித்தது. பதான் திரைப்படம் 28 நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் ரிலீஸிலே அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் பதான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ், டிவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (24.02 .2021) வெள்ளிக்கிழமை மட்டும் பதான் படத்தின் டிக்கெட் விலை 110 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐநாக்ஸ், PVR, Cinepolis மற்றும் இதர தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!