• Sep 21 2024

விடுதலை படத்தில் பாவிக்கப்பட்ட 12 மோசமான கெட்ட வார்த்தைகள்- சென்சார் போர்டு எடுத்த நடவடிக்கை- வெற்றிமாறன் படத்தில் இப்படியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையான “துணைவன்” என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். இந்தப்படம் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகி வருகிறது. 

ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எல்ரடு குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். சூரி உடன் இணைந்து விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் போலீசாக களம் இறங்க இருக்கிறார். 


 வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு  ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக வெற்றிமாறனின் பொல்லாதவன் மற்றும் வடசென்னை படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் விடுதலை படத்தில் மோசமான காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு மோசமான கெட்ட வார்த்தைகளை சென்சார் போர்டு கட் செய்துள்ளது. கிட்டதட்ட விடுதலை படத்தில் 12 கெட்ட வார்த்தைகளை சென்சார் கத்தரித்து உள்ளது. வெற்றிமாறன் படத்தில் இப்படியா என ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


மேலும் விடுதலை படத்தின் திரைக்கதைக்கு சில காட்சிகள் தேவைப்பட்டதால் சென்சார் போர்டில் அதை கட் செய்ய வெற்றிமாறன் விரும்பவில்லை. அதனால் தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே விடுதலை படத்தை பார்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement