• Nov 19 2024

15 வருடமாக கை கொடுக்காத சினிமா - குணசேகரனை நடிகனாக மாற்றி தூக்கி விட்ட பிரபல இயக்குநர்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக தன்னை நிரூபிக்க வேண்டும் என, இயக்குநர் மாரிமுத்து 2008ல் ஆசையாசையாய் இயக்கிய கண்ணும் கண்ணும் என்ற படம் படு தோல்வியை சந்தித்தது. அதன்பின் இயக்கிய புலிவால் படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

 பல இயக்குநர்களுடன் வேலை செய்து வந்தார் மாரிமுத்து இப்படியே வாழ்க்கை செல்கிறது என்ன செய்யப் போகிறோம் என்ற வருத்தத்தில் இருந்தார்.

அவ்வப்போது அடிக்கடி மிஸ்கினை பார்க்கும் மாரிமுத்து, திடீரென ஒரு நாள் ஒரு படம் எடுக்கிறேன் அதில் நீ நடி என்று கூறி இருக்கிறார். எனக்கு நடிப்பு வராது என சொல்லியிருக்கிறார் மாரிமுத்து. அதெல்லாம் நான் பார்த்துகிறேன் நீ நடி என சொல்லி நடிக்க வைத்த படம் யுத்தம் செய்.

அதிலிருந்து மாரிமுத்துவின் நடிப்பு பயணம் தொடங்கியது. இவ்வாறு இயக்குநராக சாதிக்க வேண்டும் என துடி துடித்த மாரிமுத்துவுக்கு இருந்த நடிப்பு திறமையை அவருக்கே காண்பித்து அவருடைய ரூட்டை மாற்றி விட்டிருக்கிறார் இயக்குநர். அது மட்டுமல்ல யுத்தம் செய் படத்திற்கு பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி கொண்டு இருக்கிறார்.

படங்களில் மட்டுமல்ல சீரியல்களிலும் மாரிமுத்துவின் மார்க்கெட் எகிறி விட்டது அதிலும் டிஆர்பி-யின் அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் மாரிமுத்துவின் நக்கல் நையாண்டி அல்டிமேட் ஆக இருக்கிறது. இவருக்காகவே இந்த சீரியலை நிறைய பேர் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அந்த அளவிற்கு பணம் அவருக்கு கொட்டுகிறது. இதற்கு காரணம் மிஸ்கின் மட்டும்தான். ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய மாரிமுத்து தற்போது இரண்டு கோடி வரை சம்பாதித்து கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement