அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் "டாட்லர்ஸ் & டியரஸ்". சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் இது 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப் (GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. எனினும் தற்போது 16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார்.
கைலியா போஸி தற்கொலை செய்து இருக்கலாமென தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. மேலும் இந்த செய்தியை அவரது தாயார் தனது முகப்புத்தக பக்கத்தில் உறுதி செய்துள்ளார். எனினும் இது குறித்து அவர், "என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது.
கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள் " என தனது பதிவில் தெரிவித்துள்ளார். கைலியா போஸியின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு கைலியா போஸ் மறைவிற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
பிறசெய்திகள்:
- பிரபல நடிகரின் குரலை மிமிகிரி செய்துதான் சிவகார்த்திகேயன் பிரபலமானாரா..! அவரே கூறிய தகவல்
- மக்களின் கோரிக்கையை கேட்பதற்காக புது வீடு கட்டிய ரோஜா-எப்பிடி உள்ளது தெரியுமா..?
- தமிழகத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்
- சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலாவா இது?- என்ன திடீரென இப்படி ஆகிவிட்டார்-ஷாக்கான ரசிகர்கள்..!
- பார்த்திபன் மைக் எறிந்த சம்பவம் : மனம் திறக்கும் ரோபோ சங்கர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!