மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார்.
அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார்.
இவ்வாறு பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது 18வயதைக் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். அப்படங்களில் எல்லாம் கிளாமர் காட்சிகளில் அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இவர் நடிகர் தனுஷின் 50-ஆவது படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!