தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமான பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பிரபல தமிழ் நடிகரான முரளியின் மகன் தான் அதர்வா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஈட்டி ,இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
இவ்வாறுஇருக்கையில் அதர்வா நடித்த குருதி ஆட்டம் என்ற திரைப்படம் இம்மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்த இன்னொரு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து அடுத்தடுத்த மாதங்களில் அதர்வாவின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதர்வா நடித்த குறுதியாட்டம் என்ற அதிரடித் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
எனினும் இந்த நிலையில் அதர்வாவின் மற்றொரு படமான ‘டிரிக்கர்’ என்ற படம் அடுத்த மாதம் வெளியாகுமென உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் என்ற படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிறசெய்திகள் ;
- ரஜனிகாந்தின் மகளாய் நான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றேன்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- தனுஷை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை-இது தான் விசயமா..?
- அந்த நடிகருடன் மட்டும் உறவில் உள்ளாரா..? உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா..!
- விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டு சீரியல் நடிகை செய்த செயல்-விளாசும் நெட்டிசன்கள்..!
- ரகசியத்தை போட்டு உடைக்கும் கண்ணம்மா -ஷாக்கில் பாரதி…நடக்கப்போவது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!