• Nov 14 2024

ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆன நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பெற்ற வசூல் விபரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின் . இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் சமீபகாலமாக நடிப்பதைத் தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். இதனால் படங்களில் நடிப்பதைத் குறைத்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தினை அருண்காமராஜா இயக்கியிருந்தார்.

இப்படம் ஹிந்தியில் வெளியான ஆயூஸ்மான் குர்ரானா நடித்த Article 15 படத்தின் ரீமேக். படம் கடந்த மே 20ம் தேதி வெளியாகி இருந்தது. காதல் காட்சி, நடனம் என ஜாலியாக படங்கள் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இப்படம் வேறு மாதிரியான கதைக்களத்தை கொண்டது.

படத்தில் அவரது நடிப்பு குறித்து ரசிகர்களால் பாராட்டப்பட்டது.படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

ஏ சென்டரில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது வரை தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 10 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement