தமிழ் சினிமாவின் நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். இருந்தாலும் இவருக்கு கோலிவுட்டில் எந்த ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை.
புகழ் பெற்ற நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் இவரால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை. நடிகர் விஜயகுமாருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்த சமயத்தில் கூட அருண் விஜயால் ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியவில்லை. சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த போதிலும் இவர் சினிமாவை விட்டு ஒதுங்கவில்லை.
வருடத்திற்கு ஒரு படம் இவருக்கு ரிலீஸ் ஆகி கொண்டு தான் இருந்தது. சினிமாவில் அருண் குமாராக அறிமுகமாகிய இவர், வெற்றிக்காக தன்னுடைய பெயரை அருண் விஜய் என்று கூட மாற்றினார். நல்ல நடிப்பு திறமையாக இருக்கட்டும், நடன திறமையாக இருக்கட்டும் ஹீரோவுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும் இவர் அதிர்ஷ்டம் இல்லாத ஹீரோவாகவே இருந்தார்.
அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையை மொத்தமாக திருப்பி போட்ட திரைப்படம் என்றால் அது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ தான். இந்த படத்தில் அருண் விஜய் ஏற்று நடித்த ‘விக்டர்’ கேரக்டர் அப்படியே இவரை வெற்றியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது எனலாம். தியேட்டரில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அருண் விஜய் கண் கலங்கியதனை யாராலும் மறக்க முடியாது என்றே சொல்லலாம்.
இந்த படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்களுக்கு பின்னும் அருண் விஜய் என்றால் விக்டர் நியாபகம் தான் ரசிகர்களுக்கு வருகிறது. இந்த ஒரு கேரக்டரை வைத்தே அவர் கோலிவுட்டில் கெத்தாக இருக்கிறார். அவருக்கான மதிப்பும் தமிழ் சினிமாவில் இந்த கேரக்டரினால் அதிகமாகி இருக்கிறது.
அருண் விஜய்யின் இந்த விக்டர் கேரக்டருக்கு இந்த அளவுக்கு ரீச் கிடைத்ததற்கு நடிகர் அஜித்தும் ஒரு மிக முக்கிய காரணம். அஜித்தை போன்ற ஒரு மாஸ் ஹீரோ தன்னுடைய படத்தில் மற்றொரு நடிகருக்கு இந்த அளவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பது என்பது சினிமாவில் இதுவரை நடந்திடாத ஒன்று. ஆனால் அஜித் அருண் விஜய்க்கு அந்த படத்தில் தன்னை விட ஒரு படி மேல் வாய்ப்பு கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!