தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது கதாநாயகனாக வலம் வருபவர் தான் சந்தானம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குலுகுலு. இத்திரைப்படத்தை இயக்குநர் லோகேஷின் உதவி இயக்குநராக இருந்த ரத்னகுமார் இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே மேயாத மான் மற்றும் ஆடை போன்ற திரைப்படங்களையும் இயக்கியவர். மேயாத மான் திரைப்படத்தில் சிறந்த இயக்குநராக அறியப்பட்டாலும் ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சைகளைசே் சந்தித்தது. இதனால் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் டீமில் ஐக்கியமாகி விட்டார்.
அவரது வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து அடுத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தானத்துடன் கூட்டணி சேர்வது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமீபத்தில் தான் லாரி உடன் நடிகர் சந்தானம் உலக உருண்டை எல்லாம் பார்த்தப்படி குலு குலு படத்தை ஆரம்பிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. படம் தொடர்பான வேறு எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காத நம்ம அப்டேட் கிங் திடீரென 'தலை கீழாகத்தான் குதிக்கப் போகிறோம்' என கேப்ஷன் கொடுத்து குலு குலு படத்தின் ரிலீஸ் இந்த மாதம் ஜூலை 29 என அறிவித்துள்ளார்.
இவருடைய படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் தான் லெஜண்ட் சரவணனின் தி லெஜன்ட் திரைப்படமும் வெளியாகவுள்ளதாம்.
ஒட்டுமொத்த திரையரங்கிலும் என் படம் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என 200 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா ரிலீசாக தனது தி லெஜண்ட் படத்தை உருவாக்கி ஜூலை 28ம் தேதி வெளிவர காத்துக் கொண்டிருக்கும் வேங்கையுடனே போட்டிப் போட சந்தானம் முடிவு செய்து விட்டாரே? என ரசிகர்கள் ஆச்சர்யமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே வெளியான யானை உள்ளிட்ட பல படங்கள் நின்னு பேசி வரும் நிலையில், குலு குலுவும் வெளியானால், தி லெஜண்ட் படத்துக்கு 400 தியேட்டர்கள் கூட கிடைக்காத நிலை உருவாகி விடும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர். வசூல் வேட்டை நடத்தப் போறது சந்தானமா? அண்ணாச்சியான்னு இந்த மாத இறுதியில் தெரிந்து விடும் எ ன்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்
- மகேஷ்பாபுவின் 28 வது படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- அதிரடி கூட்டணியாக இருக்கே
- 1ம் மாத திருமண நாளைக் கொண்டாடி வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்-
- இந்த மேடையை விட அந்தத் தருணம் மிகவும் முக்கியமானது- இசை வெளியீட்டு விழாவில் மெய் சிலிர்க்கும் வகையில் பேசிய ஜெயம் ரவி
- வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையைக் கைப் பற்றிய பிரபல நிறுவனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!