அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி வெளியானது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம், வங்கிகளில் நடக்கும் பண மோசடியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் சந்தித்த மோசமான விமர்சனங்களுக்கு அஜித் - வினோத் காம்போ, இந்தப் படத்தில் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள அஜித் ஆக்ஷனில் ஒன்மேன் ஷோ காட்டியுள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதோடு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
துணிவுக்கு போட்டியாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 5 நாட்களில் 175 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
பொங்கல் விடுமுறை தினங்களான 15, 16, 17 என கடந்த 3 நாட்களில் துணிவு படத்துக்கான டிக்கெட் புக்கிங் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. அனைத்து காட்சிகளுமே ஹவுஸ்புல் ஆனதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் 7 நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே வாரத்தில் துணிவுக்கு கிடைத்துள்ள இந்த வசூல், அஜித் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.
முதல் நாளில் இருந்தே துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 14 கோடியும் வசூலித்தது. அதற்கடுத்த நாட்களிலும் சீரான வசூலை வாரி குவித்த துணிவு, இதுவரை 96 கோடியை கடந்துள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் படங்களில், துணிவு தான் வசூலில் சிறப்பான சம்பவம் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!