மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் நடத்திய 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் விசாரணைக்காக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகியுள்ளார்.நடிகை ஜாக்குலின் சுகேஷ் சந்திராவை காதலித்து வந்ததாக அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், நடிகை மீது இந்த மோசடி வழக்கு பாய்ந்தது.
அத்தோடு பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த பரிசுகளையும் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடம் இருந்து சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
200 கோடி ரூபாயை மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருடைய காதலி ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என்பது தெரிய வந்த நிலையில், நடிகையையும் இந்த வழக்கில் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.
சல்மான் கான், கிச்சா சுதிப் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்துள்ள ஜாக்க்குலின் ஃபெர்னாண்டஸ், இலங்கையை சேர்ந்தவர். அத்தோடு அவரை ஹீரோயின் ஆக்குகிறேன் என்றும் பாலிவுட்டில் பெரிய பட வாய்ப்புகள் வாங்கித் தருகிறேன் என ஆசைக்காட்டி காதல் வலையில் சுகேஷ் விழ வைத்துள்ளார் என்றும் தகவல்கள் பரவின.
அத்தோடு பலமுறை இதுதொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார். மேலும், மும்பை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல நினைத்த நடிகையை மும்பை போலீஸார் விமான நிலையத்திற்கே சென்று தடுத்தனர்.இவ்வாறுஇருக்கையில், இன்று காலை 10 மணியளவில் டெல்லி பாட்டியாலாவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்காக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆஜர் ஆனார்.
இதுவரை இந்த வழக்கில் பல கோடி ரூபாய் பணவர்த்தனையை ஜாக்குலின் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை ஏன் இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை என்றும் சுகேஷை செய்தது போலவே நடிகை ஜாக்குலினையும் கைது செய்து விசாரித்து இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அத்தோடு இதுவரை அமலாக்கத்துறையினர் அனுப்பும் சம்மனுக்கெல்லாம் முறையாக ஆஜர் ஆகி வருகிறார் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என்றும் இதுவரை மணி லாண்டரிங் பிரிவின் கீழ் தனது கட்சிக்காரர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவரை விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் இருந்து ஜாக்குலினை விடுவிக்க வேண்டும் என அவரது தரப்பு வாதிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!