• Sep 20 2024

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த 29 வயது நடிகை திடீர் மரணம்- பெற்றோர் எடுத்த முடிவு- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல கொரிய நிகழ்ச்சியான Snowdrop என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை Park Soo Ryun,.அவர் இசையில் Il Tenore மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் தி டேஸ் வி லவ்ட், ஃபைண்டிங் மிஸ்டர். டெஸ்டினி மற்றும் சித்தார்த்தா ஆகிய படங்களில் இடம்பெற்றார்.

இவர் தனது வீட்டிற்கு செல்லும் போது மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் இவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.


காரணம் இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் தான் கப்பாற்ற முடியவில்லை என்றும் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளனர். இவரது  திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. 

பார்க் சூ ரியூனின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.பார்க் சூ ரியுனின் தாய் கொரிய ஊடகத்திடம் தனது மகளின் மூளை பதிலளிக்கவில்லை, ஆனால் அவரது இதயம் செயல்படுவதாக தெரிவித்தார். 


அவள் இன்னும் அருகில் இருப்பதாகவும், நீண்ட ஆயுளுடன் வாழத் தகுதியான ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்ததாக அவரது தாயார் கூறினார்.மேலும் இவரது இறப்பிற்கு கொரிய திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement