தமிழில் முக்கிய இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதோடு இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா முக்கியமான திருப்புமுனை தரும் வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .
விக்ரம் படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடலான 'பத்தல பத்தல' வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான போர்க்கொண்ட சிங்கம் பாடலை இன்று வெளியிட்டனர். விஷ்ணு பாடல்வரிகள் எழுத, ரவி பாடி உள்ளார். மகனுக்காக உருகும் பாச தந்தையின் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்:
- ராயப்பனை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்-செஞ்சிட்டா போச்சு என பதிவிட்ட இயக்குநர் அட்லி
- சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 இல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்-இந்த வாரம் பட்டைய கிளப்ப போகுது
- நடிகர் சசிகுமாரின் கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- எப்படி இருக்கு என்று பாருங்க
- சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை-பிரபல தயாரிப்பாளர்
- சர்தார் திரைப்பட உரிமையைக் கைப் பற்றிய பிரபல தொலைக்காட்சி – முதலில் ஓடிடியில் தான் படம் ரிலீஸ் ஆகுமாம்
- தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும்? சூப்பர் பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!
- மஞ்சள் நிற சேலையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…ரீசன்ட் போட்டோசூட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!