• Sep 20 2024

ஷங்கருடன் இணைந்த 3 முன்னணி இயக்குநர்கள்- கமலின் அடுத்த படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்க மேலும் 3 முன்னணி இயக்குநர்கள் இணைந்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் இந்தியன். 25 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டதால் கடந்த 2020-ம் ஆண்டு திடீரென்று  நிறுத்தப்பட்டது. 



ஒருகட்டத்தில் இப்படம் கைவிடப்படும் சூழலுக்கே சென்றுவிட்டது. இதன் பின்னர் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தூசிதட்டி எடுத்தது. மேலும் அவர்கள் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படம் உதயநிதி வசம் சென்ற உடன் இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 



இயக்குநர் ஷங்கர் ராம்சரணின் ஆர்.சி.15 படத்தையும், இந்தியன் 2 படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். அத்தோடு  அவர் தனது பணிச்சுமையை குறைக்க ஏதுவாக தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோரின் உதவியை நாடி உள்ளார்.அத்தோடு  ஷங்கர் அழைத்ததும் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்து பணியாற்றி வருகின்றனர்.



அதன்படி இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இதர நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோர் எடுக்க உள்ளனர். இதனால் இந்தியன் 2 பட ஷூட்டிங்கும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு  ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிசியாக இருப்பதால், அவர் இந்தியன் 2 பட பணிகளில் ஈடுபடவில்லை என சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement