பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் சரவணன் அருள்.இவர் ‘தி லெஜண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.
மேலும் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகின்றது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மிகவும் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.காமெடி,ஆக்ஷன் ரொமான்ஸ் சென்டிமென்ட் போன்ற அனைத்து காட்சிகளிலும் பின்னி பெடல் எடுக்கிறார். ட்ரெய்லரில் வரும் பல காட்சிகள் மற்றும் அண்ணாச்சியின் உடை போன்றவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை நினைவுகூருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் சத்யா கூறிய விடயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
அதாவது அவர் கூறிய விடயங்கள்…
ஒரு பருக்கை சோறு கூட சாப்பிட மாட்டாரு.ஒரு பாடலுக்கு 30 ஆடைகளை தேர்வு செய்தோம் .நாங்கள் அவருக்கு போட்டு பார்க்காத ஆடையே கிடையாது .நான் பணியாற்றிய படத்திலேயே குறிப்பாக விஜய் சார் படத்தை விட இந்த படத்திற்குத்தான் அதிகமாக ஒழைத்தோம்.என பல விடயங்களை தெரிவித்துள்ளார்.
Listen News!