• Sep 21 2024

30ரூபாய் இருந்தால் போதும் தரமான சாப்பாடு கிடைக்கும்- ஏழை மக்களுக்காக புதிய ஹொட்டலை ஆரம்பித்த நடிகர் சூரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நடிகர் தான் சூரி. வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக மாறிய இவர் தற்பொழுது தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு நகைச்சுவையில் கலக்கி வருகிறார்.

ரஜினி விஜய் அஜித் விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவான நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தாறுமாறாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்குடன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளார்

ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அம்மன் உணவகத்தை தொடங்கி உள்ளார். இந்த உணவகத்தில் உணவு தரமானதாகவும், அதே நேரத்தில் விலை குறைவாகவும் உள்ளதால், நடிகர் சூரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை ராஜாஜி பொது மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இந்த ஹோட்டலை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் இந்த ஹோட்டலுக்கு டென்டர் எடுத்தவர்கள் எல்லாம் மிகவும் குறைவான பணத்தைத்தான் வாடகையாக கொடுத்தார்கள். அதுமட்டும் இல்லாமல், சாப்பாட்டின் விலையை மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது சாப்பாடு தரமானதாகவும் விலை குறைவாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த ஹோட்டலில் தக்காளி சாதம், லெமன் சாதம்,தயிர் சாதம், புளி சாதம், நெய் சாதத்தின் விலை 30ரூபாய் என்றும், பொன்னி அரிசி சாதம், சாம்பர், ரசம், பொறியல்,மோர், ஊறுகாயுடன் கூடிய புல்மீல்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதனால் அங்கு வரும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்காக இந்த ஹோட்டலை தொடங்கி உள்ள சூரிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement