• Nov 17 2024

30 வயதான அமலா பாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் அமலாபால். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான மைனா படம் மூலம் மக்கள் மத்தியில்  பிரபல்யம் ஆனார். அவர் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த படமும் இதுதான். இப்படத்தின் வெற்றிக்கு பின் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்தன. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு நாக சைதன்யா நடிப்பில் வெளியான் பெஜவாடா என்கிற படத்தின் மூலம் டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அமலா பால், இதையடுத்து அவருக்கு அங்குள்ள முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து  குவிய ஆரம்பித்தது.

நயன் தாரா, திரிஷா ரேஞ்சிற்கு பேசப்பட்ட நடிகை அமலாபால், இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 4 நான்கு ஆண்டு ஒன்றாக இருந்த நிலையில் கருத்து வெறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர்.விவாகரத்துக்கு பிறகு சுதந்திர பறவையாக மாறி ஆண் நண்பர்கள் சவகாசம், இரவு மது பார்ட்டி என்று உல்லாசமாக இருந்தார். இதனால் சினிமா வாய்ப்புகளை இழந்து வந்தார்


அதன்பின் வெப் தொடர்களில் நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தும் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்தும் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.எனினும்  தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கேடவர் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் அமலா பால் சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்களாகியுள்ளது. 30 வயதான அமலா பால் இதுவரை நடித்து சம்பாதித்து பல பங்களாக்களை சென்னை, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் வாங்கியுள்ளார்.



அமலாபாலின் மொத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அத்தோடு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி அளவில் சொத்து வைத்துள்ளார் நடிகை அமலா பால். தற்போது நடிப்பதை போல் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Advertisement

Advertisement