• Sep 20 2024

39 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு தீவிரமாக பெண் தேடும் தாயார்..இந்த ஊர் பெண் தான் வேணுமாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் வலம் வருகின்றார். 

லிட்டில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர். அந்த பட்டத்தை அவரே ஏற்றுக்கொண்டு எல்லா படங்களிலும் பதிவு செய்து வந்தார்.

இதன் பின் சில காரணங்களால் இனி தனக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம் என அறிவித்தார். தன்னை சிலம்பரசன் அல்லது எஸ்டிஆர் என்றே அழைக்கவும் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை செய்தார்.

இப்போது அவர் உடல் எடையை எல்லாம் குறைத்து புதிய மனிதராக சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்

இவருக்கு தற்போது 39 வயதாகிறது. தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவருக்கு எப்போது திருமணம் என்று தான் அவரது அப்பா டிஆர் எப்போது மீடியாவை சந்தித்தாலும் கேள்வி கேட்பார்கள்.

எனினும் சமீபத்தில் டிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பி இருக்கிறார். அவருடன் சிம்ப மற்றும் குடும்பத்தினரும் சென்று இருந்தார்கள். டிஆர் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய நிலையில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவுக்கு குடும்பத்தினரை தீவிரமாக பெண் தேட தொடங்கி இருக்கிறார்கள். டிஆரின் சொந்த ஊரான மயிலாடுதுறையில் தான் பெண் தேடுகிறார்கள்.அத்தோடு அம்மா உஷா மற்றும் தங்கை இலக்கியா இருவரும் தான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மயிலாடுதுறைக்கு சென்று பெண் தேடும் விஷயத்தை செய்கிறார்கள் என தெரிகிறது.

அதனால் அடுத்த வருடத்திற்குள் சிம்புவிக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். 


Advertisement

Advertisement