• Sep 20 2024

ரஜினியின் ஜெயிலர் படத்தில் களமிறங்கும் 4 ஹீரோயின்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.இவர் நடிப்பில் தற்போது தயாராக உள்ள படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜெயிலர் படம் குறித்த அறிவிப்பு கடந்த பெப்ரவரி மாதமே வெளியிடப்பட்டாலும், அப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் ஆரம்பமாகி உள்ளது. ஆக்ஸ்ட் 10-ந் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ரஜினி வருகிற ஆகஸ்ட் 22-ந் தேதி தான் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதுவரை இதர நடிகர், நடிகைகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இதுதவிர வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இதுதவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இவ்வாறு ஏற்கனவே 3 ஹீரோயின்கள் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நான்கவதாக மேலும் ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். அது தமன்னா தான். அவரும் தற்போது புது வரவாக இப்படத்தில் இணைந்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் ரஜனியின் ஜெயிலர் படத்தில் 4 ஹீரோயின்களும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.இந்த விடயம் ரசிகர்களிடத்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement