• Sep 19 2024

தளபதியை கொத்தாக தூக்க காத்திருக்கும் 4 ஹீரோயின்ஸ்.. 10 கோடிக்கு டீல் பேசியாச்சா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது உறுதியான நிலையில், இந்தப் படத்திற்கான இயக்குநர் மட்டும் இழுபறியாகவே காணப்பட்டது. தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துள்ளது.

தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்திற்கு இயக்குனர் யார் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று கூறப்பட்டது.

அதாவது விஜய்யின் கடைசி படத்தை இயக்குவதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் போட்டி போட்டு வந்தார்கள். இதை தொடர்ந்து  தளபதியின் 69 ஆவது படத்தை இயக்கிய எச்.வினோத் லோக் செய்யப்பட்டு உள்ளாராம்.


இந்த நிலையில், தளபதி 69வது படத்தில் நடிக்கவுள்ள நடிகை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.


அதாவது, இளைய தளபதியில் படத்தில் நடிப்பதற்கு  த்ரிஷா, அலியாபட், சமந்தா மற்றும் மிருனால்தாக்கூர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் உள்ளனர். 

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகை 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கப் போவதாகத் தகவல். ஆனால் இந்த 4 பேரில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த படத்திற்காக தளபதியின் சம்பளம் 250 கோடி என்பதும் தெரிந்ததே. இதுவே அவரது கடைசிப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement