• Sep 20 2024

43 வயதாகும் இசையமைப்பளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு ரகசிய திருமணமா...பிரபல நடிகையிடமிருந்து வெளியான தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தை முடித்து  முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தான்  தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.



 தற்போது சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 43 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.



இவ்வாறுஇருக்கையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை பூஜிதா பொன்னாடா.



மேலும்  இது குறித்து நடிகை பூஜிதா தெரிவிக்கையில் " நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்த உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை " என தனது வருத்தத்தை நடிகை பூஜிதா பொன்னாடா குறிப்பிட்டுள்ளார்.

இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement