தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' என்ற படத்தின் வாயிலாக முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இருப்பினும் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அடி மேல் அடி வாங்கி நிற்கும் பிரபாஸ் அடுத்தாக கொடுக்கப்போகும் ஹிட் படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அந்தவகையில் தற்போது இவர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் கல்கி என்ற படம் தயாராகி வருகின்றது.
அதுமட்டுமல்லாது ஏனைய படங்களுக்கான பேச்சு வார்த்தையும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவரிசையில் 'சீதா ராமம்' என்ற மெகா ஹிட் பட இயக்குநருடன் கை கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் 22 வயது நடிகையான ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 22வயது நடிகை 44வயதான பிரபாஸிற்கு ஜோடியாவது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!