• Nov 10 2024

56 வயது தொழிலதிபருடன் டேட்டிங் செய்யும் 46 வயதான பிரபல நடிகை...கிண்டலடிக்கும் ரசிகர்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பெமினா மிஸ் இந்தியா, பிரபஞ்ச அழகி போன்ற பட்டங்களை வென்று மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே நடிகை சுஷ்மிதா சென். இவ்வாறான பட்டங்களை பெறுபவர்களை இந்தி சினிமா ஹீரோயினாக இழுத்துக் கொள்வது வழமை. இதே போன்றே சுஷ்மிதாவையும் தம் பக்கம் நோக்கி ஹீரோயினாக இழுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

சினிமாப் பிரபலங்களை பொறுத்தவரையில் காதலில் பிரேக் அப் வருவதும், கல்யாணத்தில் விவாகரத்து வருவதும் சாதாரணமான ஒரு விடயம். இதற்கு சுஷ்மிதா ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல. இதே போன்றே நடிகை சுஷ்மிதாவும் காதலரை பிரேக் அப் செய்து விட்டு இப்போது புதிய தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகின்றார்.

அதாவது சமீபகாலமாக ரோஷ்மன் என்பவரைக் காதலித்து வந்த இவர் கடந்த டிசம்பர் மாதம் அவரை பிரிந்து கொள்வதாக அதிகாரபூர்வமான அறிவிப்பொன்றினை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் 46 வயதான நடிகை சுஷ்மிதா தற்போது 56 வயதான தொழிலதிபர் லலித் மோடி என்பவருடன் டேட்டிங் செய்து வருகின்றார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் லலித் மோடி தனது ட்விட்டரில் சுஷ்மிதாவுடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது அப்புகைப்படங்களுக்கு மேலே "திருமணம் செய்யவில்லை டேட்டிங் மட்டுமே செய்கின்றோம்" எனப் பதிவிட்டிருக்கின்றார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் டேட்டிங்கா? எனக் கூறி அவர்களை கலாய்த்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement