• Nov 10 2024

18வயதுப் பெண்ணைக் காதலிக்கும் 48வயது நடிகர்... ஏம்ப்பா மகள் மாதிரி இருப்பாங்களே.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களைப் பொறுத்தவரையில் ரசிகர்களால் விரைவில் மறக்க முடியாத படங்கள் என்றால் அது காதல் படங்கள் தான். அவ்வாறான காதல் கதையம்சம் கொண்ட படங்களின் வரிசையில் இன்றளவும் முதல் இடத்தில் இருக்கும் படம் என்றால் அது 'டைட்டானிக்'. 


இப்படமானது 1997-ஆம் ஆண்டில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருந்தார். இந்த ஒரு படமே அவரை உலகமெங்கும் கொண்டு சென்று சேர்த்தது. இப்படம் வெளியாகி பல ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் காதலர் தினத்தன்று 'டைட்டானிக்' மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான லியோனார்டோ டிகேப்ரியோ, இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாது இவர் வாழ்க்கையில் காதல் நிலைத்து இருக்காமல் வருவதும் போவதுமாய் இருக்கிறது. 


இந்நிலையில் தற்போது 48 வயதான டிகாப்ரியோ, 18 வயது இருக்கும் மாடல் அழகி ஒருவரைக் காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியவுள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதனை அறிந்த நெட்டிசன்கள் மகள் வயதில் இருக்கும் பெண்ணை எப்படி உங்களால் காதலிக்க முடியும்? என்று கமெண்டுகளின் வாயிலாக கேட்டுத் தாறுமாறாக விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement