• Sep 20 2024

இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்: ரசிகர்களுக்கு வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வாரம் 5 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பார்த்திபன் இயக்கிய "இரவின் நிழல்" என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்பதால் இந்த திரைப் படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது

அத்தோடு லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’தி வாரியர்’ என்ற திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இது ஒரு கமர்சியல் படம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாய் பல்லவி நடித்த “கார்கி” திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்களின் ஒன்று. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

அதேபோல் பிரபுதேவா நடித்த “மை டியர் பூதம்” என்ற திரைப்படமும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.மேலும் குழந்தைகளுக்கு பிடித்தமான படமாக இந்த படம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது

அத்தோடு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக “சபாஷ் மித்து” என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மிதாலிராஜ் கேரக்டரில் டாப்சி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement