• Nov 17 2024

பிக்பாஸில் 50 லட்சம் கெடச்சுருந்தா விக்ரமன் இதான் பண்ணிருப்பாரா.? அவரே உடைத்த உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் சமீபத்தில் மிக அசத்தலாக நடந்து முடிந்தது.மேலும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர். எனினும் இதனையடுத்து, ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய வண்ணம் இருக்க, பல விறுவிறுப்பான சம்பவங்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறி இருந்தது.

மேலும் அப்படி இருக்கையில், மொத்தம் 21 போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் ஃபினாலே சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். அத்தோடு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, யார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்பதை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் குறிப்பிட்டு வந்தனர்.

 இதில் ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேற, அசிம் டைட்டில் வின்னராகவும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். மறுபக்கம் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன், இரண்டாவது இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக வலம்வந்து நல்ல புகழையும் பெற்ற விக்ரமன், வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர், மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை கூறியிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில் , தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை விக்ரமன் அளித்துள்ளார். இதில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளர்கள் குறித்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனக்கு கிடைத்த மக்களின் ஆதரவு குறித்தும் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.எனினும் அந்த வகையில் ஒருவேளை தான் டைட்டில் வின்னராக ஆகி இருந்தால் அந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு என்ன செய்திருப்பேன் என்பது பற்றியும் தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

"50 லட்சம் எனக்கு வந்தாலும் ஒரு பிளான் இருந்தது. அந்த தொகையில் நான் ஏற்கனவே 'அறம் வெல்லும்' அப்படிங்குற டைட்டில்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கணும்னு பிளான் இருந்தது. நிறைய இடங்களில் உள்ளே சொல்லி இருக்கேன், கமல் அண்ணன்கிட்டயும் சொன்னேன். மேலும் அது என்ன அப்படின்னா ரொம்ப சாதாரணமான ஏழை எளிய மக்கள், விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்கள், ஒதுக்கப்பட்ட நிலையில இருக்கக்கூடிய மக்கள், அவங்க வந்து நீதிமன்றத்துக்கு போறதோ இல்ல ஒரு வக்கீல் வச்சு வாதாடுறதோ, அவங்க நீதிக்காக போராடுறதோ, இப்ப இருக்குற நிலைமைல சாதாரணமான விஷயமே இல்லை.

அதுனால அவங்களுக்காக ஒரு சட்ட பாதுகாப்பு மையம் ஆரம்பிக்கணும் அப்படிங்குறது தான் என்னோட நீண்ட நாள் கனவு. அத்தோடு அது வந்து இந்த வருடம் நான் தொடங்கி இருக்கணும்ன்னு பிளான்ல இருந்தேன். அதுக்கப்புறம் பிக் பாஸ் வந்தேன். முடிச்சுட்டு வெளியே போகும்போது நான் தொடங்கணும்ன்னு நெனச்சு இருந்தேன். ஆனால் அந்த பரிசுத் தொகை இருந்தாலும், இல்லாட்டியும் அது தொடங்குவது உறுதி" என விக்ரமன் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement