விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பக்கம் சினிமாவில் படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் அரசியல் நுழைவிற்காக பல வேலைகளை விஜய் செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று விஜய் மக்கள் இயக்கம் தொண்டர்களை சந்திக்க பனையூருக்கு தளபதி சென்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் தான் நேற்று இணையம் முழுக்க பரவி வைரலானது. மேலும் சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை விஜய் சந்தித்திருந்தார்.
அந்தச் சமயத்தில் அசுரன் பட டயலாக்கை கூறி ரசிகர்களிடம் படிப்பு தான் முக்கியம் என்பதை விஜய் வலியுறுத்தி இருந்தார். மேலும் ஓட்டு போடுவதற்கு பணம் வாங்கக்கூடாது என்பதையும் அழுத்தமாக கூறியிருந்தார். மேலும் சில போதனைகளையும் ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் விஜய்யின் கார் இசிஆர் சாலையில் அக்கறை என்ற பகுதியில் சிக்னலில் நிக்காமல் சென்றுள்ளது. மேலும் விஜய் இதற்கான அபராத தொகை 500 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தி இருக்கிறார். இந்த செய்தி இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ப்ளூ சட்டை மாறன் நக்கல் அடித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதாவது மாணவ செல்வங்களே சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டுமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்களே வேகத்தை விட விவேகம் அதாவது படத்தை சொல்லவில்லை. ஏன்னா நமக்கு 500 ரூபாய் என்பது 10 கிலோ அரிசி வாங்குற பணம் என்று கேலி செய்திருக்கிறார் ப்ளூ சட்டை.
அதாவது ஊருக்கு தான் உபதேசம் நமக்கு இல்லை என்பது போல விஜய் இந்த காரியத்தை செய்துள்ளார் என்று ப்ளூ சட்டை கூறி இருக்கிறார். இப்போது இவருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் விஜய்யை விமர்சித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Listen News!