தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இயக்குநரின் நடிகராக தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய அயராத முயற்சியினால் தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
மேலும் இவரைப் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வெளியாகினாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது கெரியரில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படம் இவருடைய 69 படம் என்பதோடு இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.
மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. தளபதி விஜய்யை வைத்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாரிசு திரைப்படம் முடியும் முன்பே தளபதி 67 குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
எனினும் அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் 6 வில்லன்கள் நடிப்பதாகவும், நடிகை திரிஷா கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல் பரவின.
ஆனால் தற்போது சமுக வலைதளத்தில் இருந்து விலகியுள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் பிஸியாக இருக்கிறாராம். இதனால் அப்படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகர்களையும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அப்படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் 40 நாட்கள் இருக்கிறதாம். விஜய் ஒரு படத்தை முடித்த பின் ஒரு மாதம் பிரேக் எடுப்பார்.
எனவே தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க டிசம்பர் மாதம் ஆகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பிற செய்திகள்
- தமிழ்நாட்டின் ஆலியா பட் ஷங்கரின் மகளா…புகழ்ந்து தள்ளிய இயக்குநரால் அதிதி கொடுத்த ரியாக்ஷன்..!
- ரஜனியே ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்தார்-குஷியில் ரசிகர்கள்..!
- ‘பிக்பாஸ் சீசன்-6 இல் நுழையப்போகும் அந்த 5 பேர்-அடடே நம்ம புது ஹீரோவுமா…யாரும் எதிர்பார்க்காத ருவிஸ்ட்..!
- லிப்லாக் காட்சிகள்… ரிலீசுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய லெஸ்பியன் படம்-எதிர்ப்பை தெரிவிக்கும் கிறிஸ்தவர்கள்..!
- விரைவில் திருமணமாகப்போகும் நடிகை ஹன்சிகாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா…வெளியான வீடியோவால்…சொக்கிப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!