இந்திய திரைத்துறையில் அனைவருமே பெற விரும்பும் விருது தேசிய விருது. அந்த விருதை பெற்றால் தேசிய அளவில் அடையாளப்பட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இதற்காக பல படைப்பாளிகள் கடுமையாக உழைத்து படங்களை கொடுப்பது வழக்கம்.
இந்தச் சூழலில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் தணிக்கை பெற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன.
சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து உள்ளது.மேலும் சிறந்த படமாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் தேர்வாகியுள்ளது.மேலும் தெலுங்கில் சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் தேர்வாகியுள்ளார். இவர் புஷ்பா படத்திற்காக இந்த விருதினை வாங்கியுள்ளார்.
பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்திற்காக சிறந்த பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார்.இது தவிர விருது வென்றவர்கள் முழு விவரம் இதோ
கடைசி விவசாயி - Special Mention
சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி
சிறந்த ஸ்டண்ட் - RRR - கிங் சாலமன்
சிறந்த நடனம் - RRR - பிரேம் ரக்ஷித்
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - RRR - வி ஸ்ரீனிவாஸ் மோகன்
ஸ்பெஷல் ஜூரி விருது - ஷேர்ஷா -இயக்குனர் விஷ்ணு வரதன்
சிறந்த லிரிக்ஸ்: Konda Polam (Dham Dham Dham) Chandrabose
சிறந்த இசையமைப்பாளர்: புஷ்பா - பாடல்கள் தேவி ஸ்ரீ பிரசாத், RRR (பின்னணி இசை) - கீரவாணி
சிறந்த காஸ்ட்டியும்: Sardar Udham (Hindi)
சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்: Sardar Udham (Hindi)
சிறந்த எடிட்டிங்: Gangubai Kathiawadi (Hindi)
சிறந்த ஒளிப்பதிவு: Sardar Udham (Hindi)
சிறந்த பாடகி: இரவின் நிழல் - ஸ்ரேயா கோஷல்
சிறந்த பாடகர்: RRR - கால பைரவா
சிறந்த நடிகை: ஆலியா பட் (Gangubai Kathiawadi), க்ரித்தி சனோன் (MIMI)
சிறந்த நடிகர்: அல்லு அர்ஜுன் (புஷ்பா)
Best Popular film providing Wholesome Entertainment: RRR (Telugu)
Best Film on National Integration: The Kashmir Files
Best Debut film of a Director: Meppadiyan (Malayalam)
Best Feature Film: Rocketry: The Nambi Effect
Listen News!