• Sep 20 2024

தளபதி விஜய் கூறிய குட்டி ஸ்டோரியை அனிமேஷன் வீடியோவாக வெளியிட்ட 7ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது பிறந்தநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ளதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தின் இவருடைய 66 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு வாரிசு என்றும் பெயர் வைக்கப்பட்டள்ளது.இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாஸ்டர்'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் ஒரு கதை சொல்லி இருந்தார் அதாவது நம் அனைவருடைய வாழ்க்கையும் ஒரு நதி போல் உள்ளது. நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அதனுடைய சொந்த பாதையில் சென்று கொண்டிருக்கும். அப்படி செல்லும் போது சிலர் விளக்குகளை ஏற்றி நதியை வணங்குவார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும்

மற்றொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதியை வரவேற்பார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும். வேறொரு இடத்தில் நம்மை பிடிக்காத சிலர் நதி மீது கல்லெறிந்து விளையாடுவார்கள். அதையும் பார்த்து நதி அமைதியாக போய்க்கொண்டே இருக்கும்.

அந்த நதி மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையும். நம்முடைய வாழ்க்கையில் நம்மை பிடித்தவர்களும் இருப்பார்கள், பிடிக்காதவர்களும் இருப்பார்கள் அவர்களை பற்றி கவலைப்படாமல் நம்ம வேலையை செம்மையா செய்துட்டு அந்த நதிமாதிரி போய்டே இருக்க வேண்டும் என்று இருந்தார்.அந்த கதைக்கு ஏற்ப அனிமேஷன் வீடியோவாக 7ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement