'8 தோட்டாக்கள்', 'குருதி ஆட்டம்', போன்ற படங்களை இயக்கிய, இளம் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.. இன்று பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில் மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி புகழ் பெற்ற இயக்குநர் மிஷ்கினிடம், உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ கணேஷ். இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அந்த படத்தில் அறிமுகமான நடிகர் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஆகியோருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று அப்படம் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தில், தற்போது வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான அதர்வாவை வைத்து 'குருதி ஆட்டம்' என்கிற படத்தை இயக்கி இருந்தார்.மேலும் இந்த படத்தில் அதர்வா கபடி விளையாட்டு வீரராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி நடித்தார். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தே கலவையான விமர்சனங்களையே பெற்றது.
எனினும் தற்போது தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வந்த இயக்குநுர் ஸ்ரீ கணேஷ் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் இவர்களது திருமணம் இரு குடும்பத்தினர் மத்தியில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளார். இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், குடும்பத்தினர் மற்றும் இருவரது நண்பர்களும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
சுகாசினி சஞ்சீவ் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். அத்தோடு வனம், சர்பத், சீதக்காதி, போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!