• Sep 20 2024

நடிக்காத படத்திற்கு 80 கோடி சம்பளமா; விஜய் சேதுபதி தரப்பில் இருந்து வெளிவந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கதாநாயகனாக மட்டும் நடிக்காது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார் நடிகர் விஜய் சேதுபாதி.

தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.இவ்வாறு இருக்கையில் விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் படங்கள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் சேதுபதி தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வரும் நிலையில் அவரை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவியது.

தெலுங்கில் புஷ்பா 2, பாலகிருஷ்ணாவின் அடுத்த படம் மற்றும் ஷாருக் கானின் ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக நடிக்கிறார் என்றும், அந்த மூன்று படங்களுக்காக சுமார் 80 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என்றும் செய்தி வெளியானது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் செய்தி தொடர்பாளர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.அத்தோடு  "விஜய் சேதுபதி தற்போது ஷாருக் கானின் ஜவான் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார், அவர் வேறு எந்த தெலுங்கு படத்திலும் வில்லனாக நடிக்கவில்லை" என தெரிவித்து இருக்கிறார்.

அதனால் விஜய் சேதுபதி புஷ்பா 2ல் நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. 


Advertisement

Advertisement