• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸில் 90ஸ் பேவரெட் பெப்சி உமா- அதுவும் இப்படியொரு காரெக்டரிலா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொதிகையில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து அதில் கிடைத்த பிரபலம் அப்படியே சன் தொலைக்காட்சிக்கு வந்தவர் பெப்ஸி உமா. பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒரு பிரபலம்.

அந்நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான பெப்ஸி உமாவை நாயகியாக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள், ஏன் ரஜினி கூட தனது படம் ஒன்றில் நாயகியாக நடிக்க பெப்ஸி உமாவை கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர் சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று அந்த நிகழ்ச்சியோடு காணாமல் போனார்.

அத்தோடு விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரப்போவதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கூறுகின்றனர். மேலும் ஜீவா தனது மாமனாரால் அவமானப்படுத்தப்பட கண்ணனும் தனது அண்ணனை நினைத்து வருத்தப்படுகிறார்.

விரைவில் அவர்கள் ஒன்று சேர சீரியலை முடிப்பார்கள் எசொல்லப்படுகின்றது.

இடையில் கண்ணன்-ஐஸ்வர்யா வைத்திருக்கும் யூடியூப் சேனலுக்கான ஒரு காட்சிக்காக பெப்ஸி உமா சீரியலில் நடிக்கப்போகிறார் என்கின்றனர், ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Advertisement

Advertisement