தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி, மராத்தி,குஜராத்தி, மலையாளம் என பல மொழிகளிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக வலம் வருபவர் கிருஷ்ணகுமார். இவர் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக இறப்புக்குள்ளானார்.
இவருடைய அகால மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்கத்தாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாடகர் கே.கே.வின்மரணத்தால் 90s ஹிட்ஸ் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அவர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் முழுக்க கே கே இன் புகைப்படங்களைத்தான் பதிவிட்டு வருகின்றனர்.
மாதவனின் நடிப்பில் வெளியான ஜெ.ஜெ. படத்தில் வந்த “பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும்” பாடலை பாடியது கே கே தான். இன்றைய தினம் மாதவன் பிறந்தநாள் என்பதால் இந்த நாளில் இப்படி நடக்க வேண்டுமா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
காதல் தேசம் படத்தில் வந்த கல்லூரி சாலை பாடல் மூலம் கோலிவுட்வந்த கே கே கடைசியாக சரவணன் அருளின் தி லெஜெண்ட் படத்திற்காக பாடியிருக்கிறார். காக்க காக்க படத்தில் வந்த உயிரின் உயிரே , தூள் படத்தில் வந்த குண்டு குண்டு குண்டு பெண்ணே , சாமியில் வந்த கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா 7ஜி ரெயின்போ காலனியில் வந்த நினைத்து நினைத்து , கில்லியில் வந்த அப்பிடி போடு பாடல்களை எல்லாம் இவர் தான் பாடினார் என்பதால் இவரை மறக்க முடியாது என 90s ஹிட்ஸ் கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- ‘இது வழக்கமான கதை தானே வேற கதை கொண்டு வாருங்கள்’- லோகேஷின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்
- பாடகர் கே.கே யின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பிரதமர் மோடி
- திருமண பந்தத்தில் இணையவுள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்ட் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?
- விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியையும் விட்டு வைக்காத கமல்-விக்ரம் படத்திற்கு வேற லெவலில் ப்ரமோஷன்
- பாரதி கண்ணம்மா சீரியலில் என்ரி கொடுத்த சபரி-அட இவர் தான் வெண்பாவுக்கு ஜோடியா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!