தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டு விருமன்' 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்'ஆகிய திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்னும் படத்தில் நடித்த வருகின்றார்.
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த ஜப்பான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் கார்த்தி, மீண்டும் நடிகர் சூர்யா தயாரிப்பில் 2டி நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைக்குட்டி சிங்கம், விருமன் படங்களை தொடர்ந்து கார்த்தி படத்தை சூர்யா தயாரிக்க உள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திற்கு ஜல்லிக்கட்டு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!