• Sep 20 2024

கிளாமர் உடையில் ரசிகர்களை கிறங்க வைத்த 96 ஜானு-என்ன ஒரு போஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபலமாகி வரும் இளம் நடிகை தான் கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதியின் நாயகனாக நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அந்தப் படத்தில் சிறு வயது த்ரிஷாவாக தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தார் கௌரி. கியூட் பள்ளி மாணவியாக ராமை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் ஜானு கவர்ந்திருந்தார். 



இதைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்கான ஜானு படத்திலும் சிறு வயது கதாநாயகியாக இவர் தான் ஒப்பந்தமானார். மேலும் அந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.



 96 படம் வெளியாகி 90ஸ் கிட்ஸ் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ ஞாபகங்களையும் மலரும் நினைவுகளையும் தூண்டி இருந்த அந்த படம் மூலம் தான் கௌரி கிஷன் திரையுகிற்கு அறிமுகமாகி இருந்தார். இதை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அத்தோடு கர்ணனில் பொழிலால் என்னும் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார். இதன் பின்னர் மலையாள உலகிற்கு திரும்பிய கௌரி அனுகிரஹீதன் ஆண்டனி என்னும் படத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தோன்றினார். 



இதன் பின்னர் மீண்டும் தமிழில் அந்தாலாஜி படமான புத்தம் புது காலை விடியாதா என்னும் படத்தில் குயிலியாக நடித்து அசத்தி இருந்தார். இவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றிருந்தது. தற்போது தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் கௌரி ஜி கிஷன். அத்தோடு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கீர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காகித ராக்கெட் படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார்.



சில படங்களில் நடித்திருந்த போதிலும் பல விருதுகளை தட்டி சென்றுள்ளார் கௌரி.மேலும் இவர் சிறந்த அறிமுக நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த காதபாத்திரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். இதற்கிடையே கதாநாயகி வாய்ப்பை தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் இவர் வெளியீடும் புகைப்படங்கள் அனைத்தும் அதிக லைக்ஸ்களை பெற்று வருகின்றது.



இந்நிலைகயில் கருப்பு வண்ண குட்டை உடையணிந்து குதூகலமான போஸ்களை கொடுத்துள்ளார் கௌரி கிஷன்.மேலும்  அந்த புகைப்படத்தில் மினுப்பான உடையுடனும் காதில் கருப்பு வண்ண பெரிய தோடு அணிந்து கண்களால் ஈர்க்கிறார் நாயகி.





Advertisement

Advertisement