• Sep 20 2024

49வயது நடிகையை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த 25வயதுப் பசங்க.. திடுக்கிடும் தகவலைக் கூறிய பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய ஐந்து வயதில் இருந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை ஷர்மிளா. மலையாள படங்களில் அதிகம் ஹீரோயினாக நடித்துள்ள இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவர் தற்போது அம்மா ரோல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஷர்மிளா.


இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷர்மிளா பல திடுக்கிடும் விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் " கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள், படத்தில் அம்மா ரோல் இருக்கிறது என்று அழைத்தார்கள். நானும் அங்கு உடனே சென்றேன்.


அவர்கள் முதலில் என்னிடம் மரியாதையாக தான் பேசினார்கள். பின்னர் ஒரு நாள் என்னிடம் அவர்கள், எங்கள் மூன்று பேரில் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். என்னை விட கிட்டத்தட்ட 20, 25 வயது குறைவான நபர்கள் அவர்களின் வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அக்கா அக்கா என்று வாய் நிறைய அழைத்துவிட்டு இப்படி வெளிப்படையாக படுக்கைக்கு அழைக்கிறார்களே என்று அதிர்ச்சி ஆகி போனேன் உடனே அங்கு இருந்து வந்துவிட்டேன்" என்று ஷர்மிளா கூறியுள்ளார்.


பின்னர் அவர்களிடம் "இப்ப வந்து என்கிட்ட இப்படி கேட்கிறீர்களே..? உங்களுக்கே சரியா படுதா..? என்று கேள்வி கேட்டேன். ஆனால், அதெல்லாம் தெரியும் அக்கா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்றார்கள். இதனால், பட வாய்ப்பே வேண்டாம் என நான் திரும்பி வந்து விட்டேன்" எனவும் பகீர் தகவலைப் பகிர்ந்துள்ளார் 49 வயதான நடிகை ஷர்மிளா.

Advertisement

Advertisement