• Nov 17 2024

'28 வயது நபரை மூன்றாவது திருமணம் செய்த 40 வயதுப் பாடகி'- வாழ்த்துத் தெரிவித்து வரும் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் காதல் திருமணம் புரிந்த வருகின்றனர். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

அதாவது பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு ஒருவரைத் திருமணம் செய்து 50 மணி நேரம் மட்டுமே வாழ்ந்தார் .

அதனைத் தொடர்ந்து மீண்டும் 2007ஆம் ஆண்டு ஒரு திருமணம் செய்துகொண்டார். அவரையும் சில காலங்களிலேயே விவாகரத்து செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸின் 3வது திருமணம் நடந்தது. அவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்த அஸ்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

40 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் கணவர் அஸ்காரிக்கு 28 வயது என்பதோடு இந்த திருமணத்திற்கு பல ஹாலிவுட் பிரமுகர்கள் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement