• Sep 20 2024

தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்- எப்போது தெரியுமா?- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது 'கேப்டன் மில்லர்' திரைப்படம் உருவாகி வருகின்றது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படமானது வரலாற்று பாணியில் உருவாகி வருகின்றது.


இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.இதனால் தனுஷ் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.


Advertisement

Advertisement