• Nov 10 2024

தளபதி பிரியர்களுக்கு வைக்கப்பட்ட செக்! இனி களவாகவும் பார்க்க முடியாது!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற முக்கிய படமாக விஜய்யின்  'லியோ' திரைப்படம் முன்னணியில் காணப்படுகிறது. இது  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'லியோ' திரைப்படம் நாளை  உலகெங்கிலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படட்டுள்ளது.

இதனை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் நிறுவனத்தின் இயக்குனர் லலித்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்குக் விசாரணைக்கு வந்த போது,  பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கூறுகையில்,

 'லியோ திரைப்படம் நாடு முழுவதும் நாளை ஆயிரத்து 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது. மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. 

இதனால், சட்டவிரோதமாக இணையதளங்களில் இந்தப் படம் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய திரை கலைஞர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளார்.

அதன்படி,  லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம்  தடை விதித்து  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement