அஜித் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முக்கிய நபர் சொன்ன கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.பொங்கலை முன்னிட்டு இன்று (11.01.2023) துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிட்டனர்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அத்தோடு இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அஜித் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் துணிவு படம் பார்க்க சென்ற ரசிகர் லாரியின் மேலிருந்து தவறி விழுந்து இறந்தார்.இது அஜித்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக பொன்னுச்சாமி கூறினார்.இது தொடர்பாக அஜித்தின் மீது தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!