• Sep 21 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகரோடு சேர்ந்து பார்க்க ரிஸ்க் எடுக்கும் பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிப்பில் இயககுநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

அமரர் கல்கியின் பகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படக்குழுவினர் ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இந்த படத்தினை திரையரங்குகளில் ரசிகர்களுடன் காண நடிகர் பார்த்திபன் தஞ்சாவூர் வர உள்ளார். இதனை பிரத்யேக வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். காலை காட்சிக்கு வர உள்ளதாகவும் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

மேலும் இப்படமானது முதல் நாளில் மட்டும் 25 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement