மலையாள திரையுலகில் நடிகராக வலம் வந்தவர் ராஜ் மோகன். இவர் கடந்த 1967ம் ஆண்டு வெளியான இந்துலேகா என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் பிரபல இயக்குநரான கலா நிலையம் கிருஷ்ணன் நாயரின் மகளை திருமணம் செய்துகொண்டார். பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்த இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார்.இவரது மரணம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டும், அவர்கள் யாரும் உடலை வாங்க முன்வரவில்லையாம்.
இதனால் இரண்டு நாட்களாக சவக்கிடங்கிலேயே ராஜ் மோகனின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசவனுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் ராஜ் மோகனின் உடலை அரசு சார்பில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். இதன்பின்னர் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சேர்ந்து வேலை பார்த்தது செம்மையான அனுபவம் -தி கிரே மேன்’ படம் குறித்து கூலாக பதிலளித்த தனுஷ்
- கோப்ரா படத்தின் ரிலீஸ் திகதியில் ஏற்பட்ட சிக்கல்- படக்குழு போட்ட புதிய திட்டம்
- பாவம் ஐயா அந்த மனுஷன்- இப்படி கூட்டிக் குறைக்க சொல்லுறீங்களே- திடீரென உடல் எடையை அதிகரித்த சிம்பு
- ஹுரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!