• Nov 17 2024

40 வயதிலும் இளம் நடிகைகளை விட்டு வைக்காத பிரபல நடிகர்... ஒரு பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவர் அதிகளவில் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.


பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற இவர் 'மங்கத்தா, பிரியாணி, மாநாடு' போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

40 வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமல் இருந்து வரும் பிரேம்ஜி அமரன் நடிப்பினைத் தாண்டியும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது ஏதாவது ஒரு கருத்தினை ஏடாகுடமாக பதிவிட்டும் வருவார்.


அத்தோடு இளம் நடிகைகள் போடும் கவர்ச்சி நிறைந்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டும் ஜொள்ளுவிட்டும் கமெண்ட் செய்து வருகிறார்.

அந்தவகையில் அண்மையில் கூட இவர் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, சங்கர் மகள் அதிதி எனப் பல நடிகைகளினதும் புகைப்படங்களிற்கும் ரிப்ளே செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது இளம் நடிகைகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் போன்ற நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார் நம்ம பிரேம்ஜி அமரன்.


இதனை அவதானித்து வந்த ரசிகர்கள் "இந்த வேலை பாக்கிறதற்கு முதல் கல்யாணம் பண்ணுங்க" என்றும் "பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது" என்றும் கூறி தமது கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement