பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி, தற்போது 'டிக்கெட் டூ பாரடைஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை இவரே தயாரித்துள்ளார் என்பதும் முக்கியமாகும். இந்த படம் உலகம் முழுவதும் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதில் ஜார்ஜ் குளூனி ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருக்கிறார்.படப்பிடிப்பு யாரும் நிறைவடைந்து தற்பொழுது அதன் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ஜார்ஜ் குளூனியும் ஜூலியா ராபர்ட்சும் இணைந்து பங்கேற்று வருகிறார்கள்.
அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள முத்த காட்சியொன்றை படமாக்கிய அனுபவங்களை ஜார்ஜ் குளூனி சுவாரஸ்யமாக பகிர்ந்தார். இதுகுறித்து ஜார்ஜ் குளூனி கூறும்போது, "இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முத்த காட்சியை படமாக்க 80 டேக்குகள் எடுத்தனர். இதனை எனது மனைவியிடம் சொன்னதும் அப்படியா என்று கேட்டு ஆச்சரியமானார்.
உடனே நான் ஆமாம் முத்த காட்சிக்காக எடுத்த 79 டேக்குகளில் சிரித்து விட்டோம். கடைசியாக 80-வது டேக்கில்தான் முத்த காட்சியில் நடித்து முடித்தேன் என்று தெரிவித்தேன்" என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!