தமிழ் திரையுலகினை பொறுத்தவரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் சமந்தா.
இந்நிலையில் பல வெற்றிப்படங்களில் நடித்த சமந்தா தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்திருக்கும் நிலையில்,சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
'குஷி' படத்தில் சமந்தாக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
இந்நிலையில் சமந்தாக்கு தசை பிடிப்பு நோயான 'மயோசிடிஸ்' பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருந்ததால் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில்இ படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
அப்போது சமந்தா குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா ,
சமந்தாக்கு மயோசிடிஸ் நோய் தாக்கியதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு குஷி படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமந்தா படப்பிடிப்புக்கு வராத சமயத்தில தானும் தன்னுடைய படத்தின் இயக்குநரும் சமந்தா குறித்து பேசிய விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அதில் சமந்தாக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது பாதி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அவர் 10 வருடங்கள் கழித்து உடல் நிலை சரியாகி வரும் போது அடுத்த பாதியை எடுத்து கொள்ளலாம் என நகைச்சுவையாக படக்குழுவினருடன் பேசிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
அதுவரை, சமந்தா பெயரில் படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு இட்லி கடையை திறக்கலாம் என இயக்குநர் சிவாவுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது இந்த பேச்சை கேட்டு ரசிகர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!