• Sep 20 2024

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாகும் பிரபல நடிகர்?- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் சஞ்சய் தத்தின் அன்ரனி தான் என்னும் காரெக்டருக்குரிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழது வெளிநாட்டுக்கு விஜய் சுற்றுலா சென்றுள்ளார். இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தன்னுடைய 68வது படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ஒரு சிறிய தகவலின்படி, கடந்த 2002ம் ஆண்டு வெளியான விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து, திரைத்துறையில் அறிமுகமான நடிகர் ஜெய் அவர்கள் தளபதி 68 திரைப்படத்திலும் அவருக்கு தம்பியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


ஆகவே தளபதி 68 திரைப்படம், பகவதி பாணியில் இருக்குமோ என்ற எண்ணங்களும் தற்போது தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்பு ஒரு முறை ஒரு பேட்டியில் பேசிய வெங்கட் பிரபு, விஜய் அவர்களை வைத்து ஒரு ஏலியன் கதை எடுக்க ஆசைபடுவதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement